எ.அ.பாலா - I Birthday & Flashback !
இன்றோடு (JULY 30) என் வலைப்பதிவுக் குழந்தைக்கு ஓராண்டு பூர்த்தி அடைந்தது !!! இந்த நேரத்தில் உங்களோடு சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த (வலைப்பதிவு!) குழந்தை உருவாகவும், அதை பிரசவிக்கவும் (தமிழ் வலையுலகத்திற்கு என்னை அறிமுகப்படுத்தியும், தமிழில் வலை பதிவதற்கு தேவையான டெக்னிகல் சமாச்சாரங்களை விளக்கியும்!) பேருதவியாக இருந்த 'டாக்டர்' தேசிகன் அவர்களுக்கும், புதுக் குழந்தையை அன்போடு அரவணைத்த சித்தப்பா காசிக்கும் என் நன்றிகள்! குழந்தை போஷாக்காக வளரவும் (என்னென்ன பதிந்தால் சுவாரசியமாக இருக்கும் என்றும்!) டாக்டர் தேசிகன் தன்னால் இயன்றதை செய்திருக்கிறார் !
குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. தொடக்க காலத்தில், அன்பர்கள் சிலர் (சந்திரவதனா, சிலந்தி ரமணி, அன்பு, மூர்த்தி, யளனகபக கண்ணன், இரவிக்குமார், டோண்டு, கோபி, பத்ரி ஆகியோர்) குழந்தையின் வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமாக (பின்னூட்டமிட்டும், பாராட்டியும்!) இருந்தனர்!
தவழ ஆரம்பித்த குழந்தை பக்கத்து வீடுகளுக்கு (மற்றவர் பதிவுகளில் கருத்து சொல்ல!) செல்லத் தொடங்கியது. பொதுவாக நல்ல வரவேற்பும் இருந்தது ! சில வீடுகளில் பொருட்களை உடைத்து (பின்னூட்டச் சண்டை சச்சரவில் மாட்டி!) அவ்வீட்டுச் சொந்தக்காரர்களின் கோபத்துக்கு (அவ்வப்பொழுது!) ஆளானதும் உண்டு ;-)
பின், குழந்தை தத்தி தத்தி மெல்ல நடை பயில (கதை, கவிதை, அரசியல், சமூகம், சினிமா, விளையாட்டு குறித்து பதிவுகள் போடத் துவங்கியதைத் தான் சொல்கிறேன்!!!) ஆரம்பித்தது. முதல் 6 மாதங்கள் குழந்தை பூர் வ ஜென் ம ஞா ப கங் க ளில் அவ்வப்போது திளைத்திருந்தது !
நண்பனுக்கொரு மடல் எழுதி ஆனந்தப்பட்டது !!!
குழந்தை ஆர்வமாக பலமுறை ஈடுபட்ட ஒரு ஜாலியான கேளிக்கையில் பலரும் பங்கெடுத்துக் கொண்டு குழந்தையை குஷிப்படுத்தினர் :)
குழந்தை சிலபல கோமாளித்தனங்கள் (சிரித்ததற்காக கைது, படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க - 1 , 2 , 3 , 4 , 5 , 6 , அலுவலக வழிப்பாட்டு பாடல் , மது , மனைவிகள் போன்ற பதிவுகள்!) செய்து பார்க்க வந்தவரை கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறது !
அவ்வப்போது, சில தத்து பித்து குசும்புகள் பண்ணி சிலரை (விளையாட்டாகத் தான், குழந்தை தானே !)கலவரப்படுத்தியிருக்கிறது !!!
ஒரு முறை வெகுண்டிருக்கிறது !!!!!
நல்ல உள்ளங்களையும், திறமையையும் (Dr.வம்ஷி மூதா , MS சுப்புலஷ்மி , வெங்கடெஷ் , சுஜாதா , சகாயராஜ் , கிருஷ்ணன் ) கண்டு வியந்து பெருமிதம் கொண்டிருக்கிறது.
ஆழ்வார் பாசுரங்களில் உள்ளபக்தி ரஸத்தில் அவ்வப்போது மூழ்கியிருக்கிறது.
கவிதை என்று ஒன்றை கிறுக்கியிருக்கிறது !!!
ராஜ ராஜேஸ்வரியையும் மெட்டி ஒலியையும் பார்த்து மழலைச் சொற்களில் உளறியிருக்கிறது !! அதற்கு அந்திமழைச் சாரலாக பாராட்டும் கிடைத்தது :)
சூழலை குழந்தைத் தனமாக நக்கல் செய்து களிப்படைந்திருக்கிறது !!!
தனக்குப் மிகவும் பிடித்த கிரிக்கெட் ஆட்டம் குறித்து
ஆதங்கமும் மகிழ்ச்சியும் கோபமும் பட்டிருக்கிறது.
சில நேரங்களில் தாங்கமுடியாமல் காச்மூச் என்று கூச்சல் போட்டிருக்கிறது !!!
Last but not the least, ரஜினி அங்கிளின் சந்திரமுகியைப் பார்த்து கை தட்டி சந்தோஷ ஆரவாரம் பண்ணியிருக்கிறது !
இதற்கு மேல் என் குழந்தையைப் பற்றி நானே பெருமை பேசினால் நன்றாக இருக்காது என்பதால் இத்துடன் விடு ஜூட் (அல்லது) மாயவரத்தான் பாஷையில் 'அப்பீட்' ஆகிக் கொள்கிறேன் ;-)
இவ்வலைப்பதிவுக் குழந்தையின் (சுமாரான!) வளர்ச்சிக்கு தங்களால் இயன்ற ஊக்கத்தை நல்கிய (பதிவுகளைப் படித்து பின்னூட்டமிட்ட/பின்னூட்டமிடாத, பதிவுகளைப் படிக்காமல் பின்னூட்டமிட்ட/பின்னூட்டமிடாத, +/- நட்சத்திர பரிந்துரை செய்த/செய்யாத!) அன்பான வாசகப் பெருமக்களாகிய வலைப்பதிவுலக நண்பர்களுக்கு, இருகரம் உயர்த்தி நன்றி, நன்றி, நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!
Good Bye!
என்றென்றும் அன்புடன்
பாலா
பி.கு: ஒரு வருடத்தில் பதித்தவை - 148 பதிவுகள் இதையும் சேர்த்து !!!
42 மறுமொழிகள்:
many more happy returns of the day.i guess u will be seeing Chandramukhi today to celebarate the happy occassion:)
Congrats!
148 Posts! wow! naan mukki mukki ippaothan 50 aavuthu!
அமோகமான வாழ்த்துக்கள் பாலா. ப.ச.வை எப்ப திரும்ப ஆரம்பிக்கப் போகிறீர்கள்?
வாழ்த்துக்கள் பாலா...நன்றிகளும்(எதற்கென்று தெரியும் என எண்ணுகிறேன்)
வாழ்த்துக்கள் பாலா..தமிழ் உலா தினமும் ஒரு முறை தொடரட்டும்
வாழ்த்துக்கள் பாலா... இணையத்தின் மூலமாக உங்களைப்போன்ற சிலரின் நட்பு கிடைத்ததற்கும்
்வஅனஆ அன்புக்குரிய பாலா,
இனிய வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்...
வழமைபோல் இனிமையான பதிவுகளையும், அருமையான பின்னூட்டங்களையும் தொடர வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
அன்பு
வாழ்த்துக்கள் பாலா,
இதே உத்வேகத்துடன் இன்னும் சிறப்பாக மென்மேலும் எழுத வாழ்த்துக்கள்
அன்புடன்...ச.சங்கர்
ரவி, சுரேஷ், கணேசன், தெருத்தொண்டன், குழலி, சிங்கை அன்பு, Sankar,
உங்கள் வாழ்த்துக்களுக்கும், அன்புக்கும் நன்றி !
ஐகாரஸ்,
நன்றி. ப.ச இன்னும் கொஞ்ச நாளைக்கப்றம் தான் !!!
LL தாஸ¤,
நன்றி, உங்கள் "நன்றி"யின் பின்னணி புரிந்தது ;-)
எ.அ. பாலா
குழந்தை 'செம'ஆட்டம் போட்டிருக்கிறதே; கண்பட்டுவிடப்போகிறது.
மேலும் போடப்போகும் ஆட்டங்களுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் பாலா!!!!
குழந்தை ஆரோக்கியமாகவும்,நல்லறிவோடும்
வளரவேணுமென்று பிரார்த்திக்கின்றேன்.
என்றும் அன்புடன்,
துளசி.
வாழுத்துஸ்..!
இந்தப் பதிவிற்கு வந்து உங்க வெகுண்டு கதையை படிச்சேன். ரொம்ப நல்லா இருந்தது..
குழந்தை இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்களுடன்,
ரம்யா
குழந்தை தின்று விளையாடி இன்புற்றிருந்து நீடூழீ வாழ வாழ்த்துகள்!!
பாலா,
இனிய வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்
உங்கள் பதிவால் இன்ஸ்பைர் ஆகி பதிக்க வந்தவன் நான். ஹிந்து உயர்நிலைப்பள்ளி நினைவுகள் இன்னும் எழுதவேண்டியவை உண்டா? ஆவலுடன் எதிர்பார்க்கிரேஏண்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் உங்களை விட குழந்தைப்பா! சீனியர் குழந்தைகள் ஜுனியர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வழக்கத்தினை இந்த குழந்தை ஆரம்பித்து வைக்கலாமே ;-)
வாழ்த்துக்கள்!!!
மனமார்ந்த வாழ்த்துக்கள் பாலா
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் பாலா.
தருமி,
'செம ஆட்டம்' என் கூடப் பிறந்தது ! வாழ்த்துக்களுக்கு நன்றி !!!
துளசி அக்கா,
'நல்லறிவு' கொஞ்சம் உள்ளது :) வாழ்த்துக்களுக்கு நன்றி!!!
மாயவரத்தான்,
அதென்ன 'வாழுத்துஸ்' ???? வாழ்த்துக்களுக்கு நன்றி !!!
ரம்யா,
'வெகுண்டு'வை கதை என்கிறீர்களா ;-) வாழ்த்துக்களுக்கு நன்றி !!!
தங்க(முரசு)மணி, குமரேஸ்,
நன்றி, நன்றி !!!
டோண்டு சார்,
டோண்டுவுக்கே நான் Inspiration-ஆஆஆஆஆ .... :)
Narain,
ஜூனியர் குழந்தைக்கு எப்படிப்பட்ட 'விருந்து' வேணும் தல ;-) வாழ்த்துக்களுக்கு நன்றி !!!
சந்திரவதனா,
எனக்கு (முதல்) ஊக்கம் தந்தது நீங்கள் தான் !! வாழ்த்துக்களுக்கு நன்றி !!!
ஜோ,
வாழ்த்துக்களுக்கு நன்றி !!! Pl. check my comments at http://lldasu.blogspot.com/2005/07/blog-post_30.html
Eswar,
//பள்ளி நாட்களைப்பற்றியும், கல்லூரி நாட்கள் பற்றியும் பதிவுகளை எதிர்பார்கிறேன்
//
Soon !!! வாழ்த்துக்களுக்கு நன்றி !!!
Padma,
வாழ்த்துக்களுக்கு நன்றி !!!
அன்பு,
பதிவுகளை மட்டுமன்றி என் பின்னூட்டங்களையும் பாராட்டியதற்கு ஸ்பெஷல் நன்றி :)
நான் புதிதாக பதிய வந்தபோது எனக்கு உங்களைப் போன்றோர் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தியது போல், நானும் செய்ய வேண்டுமில்லையா ????
என்றென்றும் அன்புடன்
பாலா
வலைப்பதிவு நண்பர்களே,
உங்களிடம் ஒன்று சொல்லாவிட்டால் என் தலை வெடித்து விடும் :) இப்போது தான் கவனித்தேன் !! இப்பதிவில் சரியாக 50 சுட்டிகள் (Links) இடம் பெற்றுள்ளன ! (எழுதும்போது இதற்காக திட்டமிடவில்லை! தற்செயலாக அமைந்தது தான் !!!)
மேலும், இவ்வளவு சுட்டிகள் அமைந்த ஒரு பதிவை இதுவரை யாரும் போட்டதில்லை என்பது என் யூகம் (மட்டுமே!) ! அதனால், இப்பதிவு குறித்து கின்னஸ¤க்கு எழுதிப் போடாலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் ;-) யாராவது கின்னஸின் முகவரியை தாருங்களேன், ப்ளீஸ் :)
எ.அ. பாலா
Hi Bala,
Visiting tamizmaNam after very long time. Congrats for all(completing 2nd yr, reference by dinamalar everything.....)
-Thangam
அன்புக்குரிய பாலா அவர்களுக்கு,
அதற்குள்ளாகவா ஒருவருடம்? என்னால் நம்பவே முடியவில்லை! ஏதோ நேற்றுதான் ஆரம்பித்தது போன்று இருக்கிறது.
குழந்தையா நீர்? எத்தனை மிக நல்ல பதிவுகளை இட்டு படிப்பவர் மனதைக் கொள்ளை கொண்டீர்கள்!
பெரும்பாலான விஷயங்களில் உங்கள் கருத்தோடு நான் ஒத்துப் போனதில் இருந்து உங்கள்பால் எனக்கு அதீத பிரியம்!
வலைப்பூவில் நல்ல பல கருத்துக்களை உள்ளிட்டு படிப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும் எங்கள் அன்புடன் பாலா, ஓராயிரம் ஆண்டு நீவிர் வாழ்க!
வாழ்த்துக்கள் பாலா.
செஞ்சுரி போட்ட நீங்கள் ஃபுல் ஃபார்மோடு ஆட்டத்தைத் தொடர வாழ்த்துக்கள்...
// யாராவது கின்னஸின் முகவரியை தாருங்களேன், ப்ளீஸ் :) //
கின்னஸ் முகவரிக்கான சுட்டி
வாழ்த்துக்கள் பாலா !
Dr.தேசிகன் ( வயது - 1 வருடம் 2.5 மாதம்)
பிகு: டாக்டர் பட்டத்திற்கு நன்றி.
வாழ்த்துக்கள் பாலா,
1 வருடம் 148 பதிவுகள் , 1471 பிண்ணூட்டங்கள்(நான் எடுத்த கணக்கு - விருப்பமிருந்தால் சரி பார்த்துக்கொள்ளவும்) ,
நிச்சயமாக பெரிய விஷயம் . பிரமிப்பாக உள்ளது.. என் குழந்தைக்கு இப்போது தான் 2.5 மாதம் ஆகியுள்ளது ..24 பதிவுகள்..இதுக்கே மூச்சு வாங்குது..
மேலும் பல ஆண்டுகள் உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள் பாலா !
வீ எம்
Congrats! Keep it up
வாழ்த்துக்கள் பாலா. உற்சாகம் குறையாமல் எழுதி வருகிறீர்கள். தொடருங்கள், நல்ல பதிவுகள் தாருங்கள்!
பாலா,
இன்று தான் படித்தேன் இந்தப் பதிவை. ஓராண்டு முடிந்து துள்ளாட்டம் போட்டு விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு வாழ்த்துக்கள்!!
அப்றம்.. ஒரு வருசமானா குழந்தைக்கு அடிக்கடி சாதாரண உணவே கொடுக்கலாமாம் (பேரக்ஸ், செரெலாக் எல்லாம் இனிமே தேவையில்லையாம்)
என்னென்ன உணவு கொடுக்கலாம்னு உங்க டாக்டர் கிட்ட ஒரு முறை கேட்டு கொடுங்க(அதாவது.. பதியுங்க)
**************************************************
Thangam,
வாழ்த்துக்களுக்கு நன்றி ! "பல்லவியும் சரணமும்" கடையை நான் மூடி விட்டதால், உங்களை என் வலைப்பதிவில் அடிக்கடி
பார்க்க முடியவில்லையோ :) 'தினமலர் reference" ---- No controversies please ;-)
************************************************
அன்பில் மூர்த்தி
வாழ்த்துக்களுக்கு நன்றி, நன்றி, நன்றி !
//குழந்தையா நீர்? எத்தனை மிக நல்ல பதிவுகளை இட்டு படிப்பவர் மனதைக் கொள்ளை கொண்டீர்கள்!
பெரும்பாலான விஷயங்களில் உங்கள் கருத்தோடு நான் ஒத்துப் போனதில் இருந்து உங்கள்பால் எனக்கு அதீத பிரியம்!
//
உங்கள் (என் பால் கொண்ட) நம்பிக்கைக்கும், அன்புக்கும் இன்னொரு நன்றி !
//வலைப்பூவில் நல்ல பல கருத்துக்களை உள்ளிட்டு படிப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும் எங்கள் அன்புடன் பாலா,
ஓராயிரம் ஆண்டு நீவிர் வாழ்க!
//
மேலும் உள்ளங்களை "கொள்ளை கொள்ள" (பதிவுகளின் வாயிலாக) நிச்சயம் முயற்சிப்பேன்.
***************************************************
வாழ்த்துக்களுக்கு நன்றி, (கொங்கு) ராசா (Raasa) :)
**************************************************
சுதர்சன் கோபால்,
வாழ்த்துக்களுக்கு நன்றி, நீங்களும் GCT-ian என்பதில் மகிழ்ச்சி. 'தமிழ்மணம்' காசியும் GCTian என்பது உங்களுக்கு தெரியுமா ?
***************************************************
முகமூடி,
//கின்னஸ் முகவரிக்கான சுட்டி
//
உங்கள் நக்கலுக்கு ஓர் அளவே கிடையாதா :)
**********************************************
My Dear Dr.தேசிகன்,
வாழ்த்துக்களுக்கு நன்றி. இவ்வளவு சின்ன வயதில் (1 வருடம் 2.5 மாதம்) டாக்டர் பட்டம் பெற நீங்கள் மேற்கொண்ட முயற்சி
பாராட்டுதலுக்கு உரியது ;-)
*****************************************************
அன்பில் வீ எம்,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
//
1 வருடம் 148 பதிவுகள் , 1471 பிண்ணூட்டங்கள்(நான் எடுத்த கணக்கு - விருப்பமிருந்தால் சரி பார்த்துக்கொள்ளவும்) ,
//
எனக்கு சரி பார்க்கத் தெரியாது :-( எப்படி என்று விளக்கினால் தன்யனாவேன் :) உங்கள் தொலைபேசி எண்ணை என்
மின்னஞ்சலுக்கு (balaji_ammu@yahoo.com) அனுப்பவும். பேச விருப்பம் !!!
//என் குழந்தைக்கு இப்போது தான் 2.5 மாதம் ஆகியுள்ளது ..24
பதிவுகள்..இதுக்கே மூச்சு வாங்குது..
//
துடுக்கான குழந்தை தான் :) கொஞ்சம் hyperactive ஆக இருப்பதால், அப்பப்ப மூச்சு வாங்குது ;-)
*****************************************************
THANKS, RAJINI RAMKI !!!!
************************************************
//வாழ்த்துக்கள் பாலா. உற்சாகம் குறையாமல் எழுதி வருகிறீர்கள். தொடருங்கள், நல்ல பதிவுகள் தாருங்கள்!
//
"யளனகபக" வான உங்கள் நல்வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி !!!
**************************************************
கோபி,
வாங்கய்யா, இப்ப தான் டைம் கிடைச்சுதா ???
வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி !!!
//
அப்றம்.. ஒரு வருசமானா குழந்தைக்கு அடிக்கடி சாதாரண உணவே கொடுக்கலாமாம் (பேரக்ஸ், செரெலாக் எல்லாம் இனிமே
தேவையில்லையாம்)
//
ஒண்ணும் புரியலையே, சாமி !! என்ன சொல்ல வரீங்க ?
**************************************************
என்றென்றும் அன்புடன்
பாலா
பி.கு: மொத்தத்தில் உங்கள் அனைவரின் 'அன்பு மழையில்' நனைந்து ஆனந்தமாக உள்ளேன் !!!! மீண்டும் நன்றி.
************************************************
//ஒண்ணும் புரியலையே, சாமி !! என்ன சொல்ல வரீங்க ?//
அது ஒன்னுமில்லீங்க பாலா,
பேரக்ஸ், செரெலாக் மாதிரி லைட்டான பதிவோட, சாதாரண உணவு மாதிரி கொஞ்சம் கணமான பதிவுகளை அதிகமா பதியுங்கன்னு சொன்னேன்.
'வலைப்பதிவுலகில் முதன் முறையாக 50 சுட்டிகளைக் கொண்ட, இணையத்துக்கு வந்து சில மாதங்களே ஆன, 150 பதிவுகளைத் தாண்டிய என்று சன் டிவி போல் விழா கொண்டாடறீங்க' ;-))
வாழ்த்துக்கள்!
Boston Sir,
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :)
//சன் டிவி போல் விழா கொண்டாடறீங்க' ;-))
//
What to do ? ADVERTISEMENT has become an integral part of Modern Existence (NOT Existentialism) ;-)
Appadiyellam illa bala..Nesamaave romba naal kazhichu etti paarkiren.
பாலா,
எவ்வளவு அருமையாக விளையாடுகிறது குழந்தை. முதலில் குழந்தைக்கும், அதன் அப்பாவிற்கும் த்ருஷ்டி சுத்திப் போடுங்கள். அப்புறம் ம்யூஸ் மாமா பெயரை சொல்லி ஒரு சாக்லேட் வாங்கித்தரவும்.
Dear CT and Muse,
Thanks, but you guys are a bit late, I wrote this in July 2005 ;-)
enRenRum anbudan
BALA
148 Posts!インプラント
wow gold wow! naan mukki mukki ippaothan 50 aavuthu!
Appadiyellam illa bala..Nesamaave romba naal kazhichu etti paarkiren.
http://britneyspearsstore.blogspot.com/
Post a Comment